இயங்கலை மூலம் கடன் தருவதாகச் சொல்லும் செயலிகளில் கவனமாக இருக்குமாறு ஒன்றிய சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று வெளியிட்ட விழிப்புணர்வு அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- கூகுள் விளையாட்டு கடையில் உள்ள சுமார் 60 கடன் விண்ணப்பிப்புச் செயலிகள் உலா வருகின்றன. இவைகள் எதுவும் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியில் பதிவு செய்யப்படவில்லை. இந்த கடன் செயலிகளைப் பயன்படுத்தும் பொதுமக்களின் செல்பேசித் தகவல்கள் அனைத்தையும் சேகரித்து அவை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இது போன்ற கடன் செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலை மூலம் கடன் தருவதாகச் சொல்லும் செயலிகளில் கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஒன்றிய சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடன் தருவதாக செல்பேசி செயலிகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் தகவல்களைத் வேறு வகைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக அறியமுடிகிறது. எனவே செயலிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும், என்பதற்காக இந்த விழிப்புணர்வு தகவல் வெளியிடப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



