Show all

சிலம்பரசன் நடிக்கும் பத்துதல! தலைப்பின் விளம்பரச் சுவரொட்டியை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்

மப்டி மறுதயாரிப்பு படத்தின் தமிழ் தலைப்பை 10 இயக்குனர் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், படத்திற்கு பத்துதல என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நடிக்க ஒப்பந்தமான மப்டி படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் சிம்பு. கன்னட மறுதயாரிப்பு படமாக இப்படத்தில் சிம்புடன் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். மூன்று ஆண்டுகளாக அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மப்டி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அதிரடியாக தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று மப்டி மறுதயாரிப்பு படத்தின் தமிழ் தலைப்பை 10 இயக்குனர் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள்.

ஓபிலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள மப்டி கன்னட மறு தயாரிப்பு படத்தின் தலைப்பு மற்றும் தலைப்பு பார்வை விளம்பர ஒட்டியை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது, அதன்படி கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள இப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்துக்கு ‘பத்து தல’ என பெயரிட்டுள்ளனர். தலைப்பு பார்வை விளம்பர ஒட்டியை இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ராஜேஷ், விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ், பா இரஞ்சித், ஆனந்த் சங்கர், விஜய் மில்டன், சந்தோஷ் பி ஜெயக்குமார், சாம் ஆண்டன், அஸ்வத் ஆகியோர் வெளியிட்டனர். இப்படம் கன்னடத்தில் வெளியாகி வெற்றி வழங்கிய மப்டி படத்தின் மறுதயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.