Show all

தொடக்கமே அதிரடி! மருத்துவமனையிலிருந்து கிளம்பிய சசிகலா காரில் அதிமுக கொடி

மருத்துவமனையில் இருந்து விடைபெற்ற சசிகலா, பயணம் செய்யும் காரில் அதிமுக கொடி. 

18,தை,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவமனையில் இருந்து விடைபெற்ற சசிகலா, பயணம் செய்யும் காரில் அதிமுக கொடி கட்டியுள்ளது சசிகலாவின் முதல்அதிரடியாக பேசப்படுகிறது.

பெங்களூரு சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த சசிகலா, கடந்த புதன்கிழமை விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவமனையில் இருந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகள் நேரடியாக சென்று, விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர். 

இந்தநிலையில் சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார். இதையடுத்து, இன்று சசிகலா மருத்துவமனையில் இருந்து விடைகொடுக்கப்பட்டார். ஒரு கிழமை தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதான மருத்துவர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு கிழமை தங்கி சசிகலா ஓய்வெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து விடைபெற்று  வெளியே வந்த சசிகலா, செல்லும்  காரில் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.