பேரறிமுக இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில், அவருக்குக் கதைத்தலைவியாக யாசிகா நடிக்க உள்ளார். 19,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இயக்குனராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘இறைவி’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்கள் கொண்டாடிகளிடையே நல்ல வரவேற்பு பெற்றன. தற்போது இராதா மோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ள அவர், மாநாடு படத்தில் சிம்புவுக்கு பகைவனாக நடித்து வருகிறார். இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் கதைத்தலைவனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘கடமையை செய்’ என பெயரிட்டுள்ளனர். முத்தின கத்திரிக்காய் படத்தின் இயக்குனர் வெங்கட் ராகவன் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கதைத்தலைவியாக யாசிகா நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூசையுடன் தொடங்கியது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.