Show all

இரஜினி மாதிரி இல்லை; பட்டென பதிலளிக்கிறார் மு.க.அழகிரி! தான் பாஜகவில் சேரவுள்ளதாக அறியவருகிற செய்தி பகடி என்று

நான் பாஜகவில் சேரவுள்ளதாக சிலர் பகடியாடிக் கொண்டிருக்கின்றனர் என்கின்றார் மிகத் தெளிவாக மு.க.அழகிரி

02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி. திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றிய அமைச்சராகவும் இருந்தார். இதற்கிடையில், கட்சி கட்டுப்பாட்டை மீறினார் என தி.மு.கவிலிருந்து அழகிரியை கருணாநிதி நீக்கினார். கருணாநிதி மறைந்த பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் அழகிரி. இருப்பினும், அவரை தி.மு.கவில் மு.க.ஸ்டாலின் சேர்க்கவில்லை.

அதனையடுத்து, அவர் அரசியலிலிருந்து விலகியே உள்ளார்.  தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும், அது தொடர்பாக வரும் வெள்ளிக் கிழமை ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் அவரது தந்தை கருணாநிதி பெயரில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது.

இதனிடையே வரும் சனிக்கிழமை தமிழகம் வர உள்ள அமித்சாவை அழகிரி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று ஒரு புரளி கிளப்பபட்டு திமுகவிற்கு அதிர்ச்சியூட்டும் ஆர்வம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல்கள் மற்றும் பாஜகவினர் ஆர்வப்பாடு குறித்து விளக்கமளித்த மு.க.அழகிரி, ‘பாஜகவில் இணைவது குறித்தோ, புதிய கட்சி தொடங்குவது பற்றியோ இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. நான் பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என எல்.முருகன் கூறுவது அவரது கருத்து’ என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் பாஜகவில் சேரவுள்ளதாக சிலர் நகைச்சுவையை முன்னெடுப்பதாகவும் மு.க.அழகிரி தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.