29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் படுதீவிரமாக கருத்துப் பரப்புதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தினகரன் கட்சியின் கர்நாடக பொறுப்பாளர் புகழேந்தி, அம்மாநில தமிழர்களிடம் அறிமுகமானவர். காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவினர், புகழேந்தியை அணுகி பேசினர். இது தொடர்பாக தினகரனிடம் ஆலோசித்திருக்கிறார் புகழேந்தி. அதில், காங்கிரசை ஆதரித்து கருத்துப் பரப்புதல் மேற்கொள்வதுடன் கட்சி தொண்டர்களை காங்கிரஸுக்கு வாக்களிக்கும் வகையில் ரகசிய பணிகளில் ஈடுபடலாம் என புகழேந்திக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறார் தினகரன். இதனையடுத்து, பாஜகவுக்கு எதிராக வெளிப்படையாகவே காங்கிரசை ஆதரித்து களமிறங்கினார் புகழேந்தி. மேலும், தமிழகத்திலிருந்து தினகரன் கட்சியை சேர்ந்த சுமார் 2000 தொண்டர்களை கர்நாடகவுக்கு வரவழைத்திருக்கிறார் புகழேந்தி. அவர்களை 20 அணியாகப் பிரித்து தமிழர்கள் பகுதிக்குள் களமிறக்கியிருக்கிறார். ஏற்கனவே, 'தினகரனோடு கூட்டணி வைக்கவே திமுகவுடன் திருநாவுக்கரசர் முரண்பாடுகளையும் சர்ச்சைகளையும் வளர்த்து வருகிறார்' என்கிற குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் எதிரொலிக்கும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கும் நிலைப்பாட்டை தினகரன் எடுத்து புகழேந்தி மூலம் செயல்படுத்தியிருப்பதை உளவுத்துறையினர் உன்னிப்பாக கவனித்துள்ளனர். மேலும் பாஜகவை வீழ்த்தும் சக்தி காங்கிரசுக்கு மட்டுமே இருப்பதால் காங்கிரசை ஆதரிக்கிறோம். என சொல்லி வருகிறாராம் புகழேந்தி. இந்த நிலையில், காங்கிரசுக்கு ஆதரவாக தினகரன் தரப்பு செயல்பட்டிருப்பதை பாஜக தலைமைக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம். தமிழர்கள் பகுதியில் பாஜகவுக்காக தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருந்த தமிழக பாஜக பிரமுகர்கள், காங்கிரசுக்கு ஆதரவாக தினகரன் தரப்பினர் ஈடுப்பட்டிருந்தை நேரடியாகக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதனை தேர்தல் களத்தில் இருந்த அமித்ஷாவின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளனர் தமிழக பாஜகவினர். தினகரன், காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் தொடருமானால், திமுக கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி வரும். ஆனாலும் காங்கிரஸ், பாஜக அடிமைத் தனத்தில் இருந்து மீண்டு திமுக தமிழகத்தில் தனித்தியங்குமானால், திமுகவிற்கும் நல்லது, தமிழகத்திற்கும் நல்லதுதான்! ஆனால் திமுக அப்படி நம்பி களமிறங்காமல், தினகரனுக்கு எதிராக சாம, பேத, தான, தண்டங்களில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ளும். எடப்பாடி- பன்னீர் அணியும், பாஜகவும் கைகோர்ப்பு முயற்சியில் ஈடுபட்டு இரண்டும் காணாமல் போகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,785.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



