Show all

எடப்பாடி விளாசல்! காலம் போன காலத்தில் நதிகள் இணைப்பு பற்றி பேசுகின்றார் ரஜினி

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காலம் போன காலத்தில் நதிகள் இணைப்பு பற்றி பேசுகின்றனர் என நடிகர் ரஜினிகாந்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளாசியுள்ளார். 

இன்றைக்கு பல பேர் புதிது புதிதாக கட்சி தொடங்குகிறார்கள். புதிய கட்சிகள் தொடங்குவது குறித்து வேறுபட்ட கருத்து எங்களுக்கு கிடையாது. ஆனால் இதுநாள் வரை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. 

இன்று காலம்போன காலத்தில் நதிகளை எல்லாம் இணைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். செயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி அதுமுடியும் தருவாயில் இப்போது புதிது, புதிதாக பல தலைவர்கள் முளைத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற காலா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தென்னிந்திய நதிகளை இணைப்பதே தனது லட்சியம் என்றார். நதிகளை இணைத்துவிட்டு கண்ணைமூடினால் மகிழ்ச்சி என்றும் ரஜினி கூறியிருந்தார். 

ஒட்டு மொத்த இந்திய ஆறுகளை இணைப்பது பற்றி நடுவண் அரசு ஆட்சிக்கு முயல்கிறவர்கள் தாம் பேசவேண்டும். கடைமடை மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநில ஆட்சிக்காக முயல்கிறவர்கள் பேசுவது பொய்யான கனவு வாக்குறுதிகளாகவே முடியும். 

கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், காவிரி மீட்டான், கனக விசயரை கல்சுமக்கச் செய்தான் என்கிற வரலாறுகளை வாய்ச் சவடால்களுக்கு பயன் படுத்திக் கொண்டேயிருக்கக் கூடாது. நம்முடைய கல்லூரிகள், நம்முடைய மருத்துவமனைகள், நம்முடைய கல்வியாளர்கள், நம்முடைய மாணவர்கள், நம்முடைய வரிப்பணத்தில் நிருவாகம் எதற்கடா நீட் என்று ஒத்துழையாமையை முன்னெடுக்க துப்பில்லாமல், ஒட்டு மொத்த ஆறுகள் இணைப்பெல்லாம் பிதற்றலைத் தவிர வேறில்லை. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,785.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.