Show all

நடுவண் மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை! செவிலியர் நாளில், செவிலியர் சேவையை பாராட்டி கவுரவிக்க

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: செவிலியர் சேவையில் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக முழுமையாகத் ஈடுபடுத்திக்கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கினார். 

அவர் பிறந்த நாளான இன்று உலக செவிலியர் நாளாக கொண்டாடப் பட்டு வருகிறது.

செவிலியர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, செவிலியர் நாளன்று உரிய முறையில் கவுரவிப்பது தான் அவர்களுக்கு நாம் செய்யும் கடமையாகும்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களைத் தேர்வு செய்து, நடுவண் மாநில அரசுகள் அவர்களது பணிப் பாதுகாப்பை உறுதிசெய்து, ஊதிய உயர்வுகளை முறையாக வழங்கி அவர்களைக் கண்ணியப்படுத்தி கவுரவிப்பதே நாம் வழங்கும் நன்றிக் கடனாகும்.

புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை ம.தி.மு.க. சார்பில் உரித்தாக்குகின்றேன் என்று வைகோ தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். நம் பழந்தமிழகத்தில் செவிலிதாய் பங்கு மகத்தானதாக குறிக்கப் பட்டுள்ளது. பெண்களுக்கு மட்டுமே செவிலித் தாயார் இருந்தனர். தாயின் தோழி,  செவிலிதாயாக மகளுக்கு உற்ற துணையாகவும், மகள் மனைவியாக அடுத்த குடும்பத்திற்குள் அடியெடுத்து வைக்கும் போது, மனைவியின் கடமைகளை எடுத்துரைப்பவளாகவும் நெருக்கமாக இருந்ததாக காட்டப் படுகிறது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,785. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.