Show all

கோயம்புத்தூரில் இருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியது ஏன்? ஆர்.எஸ். பாராதி சந்தேகம்

கோயம்புத்தூரில் இருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றுவதற்காகவே வாரணாசியில் மோடியை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கோயம்புத்தூரில் இருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றிது ஏன்?
தேர்தல் அதிகாரியை சந்தித்த திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ். பாரதி புகார்

கோயம்புத்தூரில் இருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளார். 

அதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தர்மபுரி உள்ளிட்ட 10 இடங்களில் மறுவாக்குப்பதிவு கோரப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் மறுவாக்குப்பதிவு கோரப்படாத இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவது ஏன்? 
கோயம்புத்தூரிலிருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியது அதிமுக மக்களவை வேட்பாளரை வெற்றிப்பெறச் செய்யவா என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதற்காகத்தான் துணை முதல்வர் ஒபிஎஸ் தனது மகனுடன் வாரணாசியில் மோடியைச் சந்தித்தாரா?

இது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியின் விளக்கம் திருப்தி அளிக்காததால் தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என ஆர்.எஸ். பாரதி மேலும் தெரிவித்தார். 

ஓபிஎஸ் மகனை வெற்றி பெறச் செய்யவே கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது என்று சொல்வதில் நியாயம் இருப்பதாகக் கருதுகிறோம். எனவே தேர்தல் ஆணையம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து அதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்ற கருத்து மக்களிடமும் எழுந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,146.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.