Show all

யார் பின்னாலும் செல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: சசிகலா பேச்சு

     அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் சசிகலா கூறியுள்ளார்.

     சென்னை அதிமுக தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்  பொதுச் செயலர் சசிகலா உரையாற்றினார்.

     அப்போது பேசிய அவர், யார் பின்னாலும் செல்லாமல் அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

எதிரிகள் சதி செய்கிறார்கள். அவர்கள் சதிக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். துரோகச் செயல்களுக்கு அதிமுகவினர் துணைபோக மாட்டார்கள் என்றும் சசிகலா கூறினார்.

     மொத்தமுள்ள 134 பன்னீர்செல்வம் விடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில், இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் 131 பேர் பங்கேற்றனர். தலையாய ஆலோசனைக்குப் பிறகு கூட்டம் நிறைவு பெற்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.