20க்கும் மேற்பட்ட சட்டமன்றஉறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக மடல் கொடுத்துள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு 20க்கும் மேற்பட்ட அதிமுக சட்டமன்றஉறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 20க்கும் மேற்பட்ட சட்டமன்றஉறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வெளியேறினால் அல்லது அவருக்குப் பின்னால் வந்து நின்றால் நிச்சயம் சசிகலாவால் முதல்வராக முடியாது. சோழவந்தான் உள்ளிட்ட சில தொகுதிகளின் சட்டமன்றஉறுப்பினர்கள் பகிரங்கமாகவே ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக திரண்டு வந்துள்ளனர். இது சசிகலா தரப்பை சிக்கலில் தள்ளியுள்ளது. நேற்று இரவு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் புகார்களுக்குப் பதிலளிக்க செயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டுக்கு வெளியே வந்த சசிகலா, மொத்தம் 136 சட்டமன்றஉறுப்பினர்களைக் கொண்டிருந்த அதிமுகவுக்கு, தற்போது சட்டமன்றத்தில் 135 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியமைக்க 117 பேர் தேவை. 135 பேரில் ஓ.பன்னீர்செல்வம் எதிராக மாறி விட்டார். என்று தாம் வலிமையாக இருப்பதாகத் தெரிவித்தார். மொத்தம் 135 சட்டமன்றஉறுப்பினர்களைக் கொண்டுள்ள அதிமுகவுக்கு, 20 பேர் விலகினால் அதாவது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மாறினால், 115 பேர்தான் சசிகலா வசம் இருப்பார்கள். ஆட்சியமைக்க முடியாது. அதேசமயம், திமுக ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியில் நீடிக்க முயலலாம் அல்லது அவரது ஆதரவாளர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு தேர்தலைச் சந்திக்க முயலலாம் நிச்சயம் திமுகவின் ஆதரவை ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக கேட்பாரா என்பது சந்தேகம்தான். இருப்பினும் திமுக தானாக முன்வந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு முட்டுக் கொடுப்பதை விட ஆட்சி கலைவதுதாம் அவர்களுக்கு ஆதாயம். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி சட்டமன்றத்தைக் கலைத்;து விட்டு, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எது எப்படியிருந்த போதும் பெரும்பான்மை பலம் பொருந்திய சசிகலா அணிதான் அதிமுக. ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வராகத் தொடர்ந்து செயல் பட விருப்பம் இருந்தது; அதற்காக அவர் கட்சிக்குள் நிறைய போராடியிருந்திருக்கிறார்; ஆனால் சசிகலாவே முதல்வராக வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பான்மையோரின் முன்மொழிவாக இருந்ததால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அந்த நிர்பந்தத்;;;திற்கு பணிவதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்திருக்கிறது. எது காரணம் பற்றியோ ஓ.பன்னீர்செல்வம் வெளியில் போராட்டத்தைத் தொடங்கி விட்டார்; அவரைக் கட்சியை விட்டு யார் நீக்கினாலும் நீக்காவிட்டாலும் இனி அவர் அதிமுக இல்லை. அதையும் மீறி தான்தாம் அதிமுக என்று கருதுவாரேயானால் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் தம் பக்கம் இருப்பதாக காட்சியையே மாற்றிக் காட்ட வேண்டும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சில ஊடகங்கள் சிலகட்சிகள் செயல்பட்டு ஆதாயம் அடையலாம் அல்லது தோற்றுப்போகலாம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் புதியதாகப் பிறந்து இனி புதியதாய் வளர வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



