Show all

எது சரி! குளறுபடிக்கு பிறந்த பிள்ளை நீட் என்று சொல்லலாமா? குளறுபடி என்கிற நீட் என்று சொல்லலாமா?

நாளை  நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி தேர்வு மையத்தில் இருந்து 600 மாணவர்கள், மதுரையில் உள்ள மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். குளறுபடிக்கு பிறந்த பிள்ளை நீட் என்று சொல்லலாமா? குளறுபடி என்கிற நீட் என்று சொல்லலாமா?

21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த முறை, தமிழக மாணவர்களுக்கு  வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம். குளறுபடிகளால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலையும் நேரிட்டது. இவ்வாண்டும் அதுபோன்ற ஒரு குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாளை  நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மையத்தில் இருந்து 600 மாணவர்கள், மதுரையில் உள்ள மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் மாணவர்களிடம் ஒருவித பதட்டம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ள நிலையில், தேசிய சோதனை தேர்வு முகமை நேற்று திடீரென மதுரை நகரத்தில் உள்ள 5 மையங்களையும், நெல்லையில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு மையத்தையும் மாற்றி அமைத்துள்ளது. திருநெல்வேலி புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையம், மதுரை அழகர்கோவிலில் உள்ள  லட்சுமி நாராயணா வித்யாலயா பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
புதிய தேர்வறை அனுமதியை ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில், நான்கு மணி நேரம் பயணம் செய்து தேர்வு எழுதும் நிலைக்கு கடைசி நேரத்தில் மாணவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். தேர்வு மையம் மாற்றப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
கேட்டால் ஒடிசாவில் மக்கள் புயல்பாதிப்பில் சிக்கி பாதிக்கப் படவில்லையா என்று கூட கேட்டாலும் கேட்பார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,142.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.