Show all

அவர்களுக்கு எதற்கு அரசில் வேலை! அரசு பணி புரிபவர்களின் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்தால்.

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் 3 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாம். அரசு பணி புரிபவர்களின் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைத்தால், அவர்களுக்கு அரசு வேலை இல்;லை என்பதாக சட்டம் கொண்டு வருவதே இதற்கு நிரந்தரத் தீர்வுஆக அமைய முடியும்.  


01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அதிக சம்பளம் வாங்கும் அரசு பணியில் இருப்பவர்கள், குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர்களை நம்பி தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் போது,  அவர்களின் பக்கத்து வீடுகளில் இருக்கும் பாமரர்கள் எந்த நம்பிக்கையில் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பார்கள்?

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் 37 ஆயிரத்து 358 அரசு பள்ளிகளில் 46 லட்சத்துக்கு 60 ஆயிரத்து 965 மாணவர்கள் இருந்தனர்.

நடப்பு கல்வியாண்டில் 44 லட்சத்து 13 ஆயிரத்து 336 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதனால் 2 லட்சத்து 47 ஆயிரத்து 629 மாணவர் சேர்க்கை குறைந்தது.

8357 அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 22 லட்சத்து 99 ஆயிரத்து 17 மாணவ-மாணவிகள் சேர்ந்தனர்.

நடப்பு கல்வியாண்டில் 22 லட்சத்து 31 ஆயிரத்து 88 மாணவ-மாணவிகள் சேர்ந்து உள்ளனர். இதில் 67 ஆயிரத்து 929 மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. இதனால் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் 3 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.

அதே வேளையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருக்கிறது. கடந்த கல்வியாண்டில் 52 லட்சத்து 71 ஆயிரத்து 543 மாணவ-மாணவிகள் தனியார் பள்ளிகளில் படித்தனர்.

நடப்பு கல்வியாண்டில் 12 லட்சம் மாணவர் சேர்க்கை அதிகரித்து 64 லட்சத்து 81 ஆயிரத்து 598 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.

உண்மையில் இந்தக் மாணவர் குறைவு கணக்கெடுப்பினால் நேர்மறையாக எந்தப் பலனும் ஏற்பட எந்த வாய்ப்பும் இல்லை. மாறக கணக்கெடுக்க வேண்டியது: 
1.ஒட்டு மொத்த தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் அரசுப் பணிகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள்.
2.அவ்வாறாக அரசுப் பணிகளில் இருப்பவர்களின் பிள்ளைகள் எந்தெந்த பள்ளிகளில் படிக்கின்றார்கள் என்கிற கணக்கெடுப்பு
3.அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு தேவை அரசுப் பணியா? அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கு தேவை தனியார் பள்ளியா? என்கிற முடிவை அறிந்து அதன் மீதான நடவடிக்கை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,216.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.