கொக்கரக்கோ என்று கீச்சு போட்டு, தவறுதலாகப் போட்டதாக உடனே கீச்சுப் பதிவை அழித்து, கோமாளியானார் தமிழிசை. எதற்கு கொக்கரக்கோ என்று கீச்சு போட வேண்டும்; உடனே எதற்கு அழிக்க வேண்டும் என்று கிண்டலடித்து வருகின்றனர் இணைய ஆர்வலர்கள். 08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கீச்சுவில் அவ்வப்போது பல்வேறு நிகழ்வுகளை தீயாக்கி வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று கீச்சுவில் கொக்கரக்கோ என்று ஆங்கிலத்தில் ஒரு பதிவை வெளியிட்டார் தமிழிசை. கைத்தவறுதலாக பதிவிட்டு விட்டார் போலும்; உடனே அழித்தும் விட்டார். ஆனால் இந்தக் கீச்சை வைத்து சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அப்படி என்ன கொக்கரிக்கிறார் எனவும், கோக்… கோக்…. கொக்கரக்கோ எனவும் கலாய்த்து விமர்சித்து வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,223.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



