Show all

திமுகவின் மீது பாஜகவின் அடுத்த கட்ட வியுகம் என்ன

தினகரன் ஆதரவு சட்;டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் முதலில் புதுச்சேரியிலும், பிறகு கர்நாடக மாநிலம் குடகிலுள்ள சொகுசு பங்களாவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தினகரன் ஆதரவு சட்;டமன்ற உறுப்பினர்கள் கடிதத்தை அடிப்படையாக வைத்து, எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இல்லாமல் செயல்பட்டுவருவதாக திமுகவும் குற்றஞ்சாட்டி வருகிறது.

செயலலிதா இல்லாத இந்த சமயத்தில், நடுவண் அரசில் பொறுப்பில் உள்ள தமிழர் எதிர்நிலை பாஜக அதிமுகவை வைத்து-

மீத்தேன், உணவு பாதுகாப்புச் சட்டம், ஆதார், நீட், நவோதயா பள்ளி, என்று நான்கு ஆண்டுகளில் தமிழர் உடைமைகளை ஒவ்வொன்றாக கபளிகாரம் செய்து விட நல்ல வாய்ப்பாக கருதுகிறது.

செயலலிதாவைப் போல சசிகலாவையும் பாஜகவால் வளைக்க முடியாது, என்று கருதி சட்டத்தை வைத்து அறங்கூற்று மன்றங்கள் மூலமாக சசிகலா குடும்பத்தினர்களுக்கு உறுதியான ஆப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது பாஜக.

திமுக சார்பில் ஏற்கனவே 2 முறை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுக்களில் திமுக கோரிக்கை முன் வைத்தது.

 

ஆனாலும், ஆளுநர் இதில் முடிவை எடுக்க பாஜக அனுமதிக்கவில்லை. இந்தநிலையில், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் அறங்டுகூற்றுமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கலைந்தால் தேர்தலைச் சந்திக்க திமுக தயாராகிவருகிறது என்பது இந்த நடவடிக்கை மூலம் தெளிவாகிறது. அதற்கான நெருக்கடிகளை திமுக சட்டரீதியாக கொடுக்க ஆரம்பித்துள்ளது.

பாஜக விட்டு விடுமா? திமுகவிற்கு எதிராக பாஜகவின் வியுகம் எப்படி இருக்கும். என்பதை தமிழக மக்களும், தமிழக உதிரி கட்சிகளும் ஆர்வத்தோடு கண்காணித்து வருகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.