Show all

அன்றாடம் ஒரு கொரோனா விழிப்புணர்வு காணொளி பதிவிட்டு வருகிறார் நடிகர் சூரி, தன் குடும்பத்தாரோடு

நடிகர் சூரி வெளியிட்டு வரும் நகைச்சுவை கலந்த கொரோனா  தொற்று விழிப்புணர்வு காணொளிகள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி, அண்மையில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கொரோனா தொற்று நிவாரண உதவி தொகை ரூபாய் 1 லட்சம் வழங்கினார். அவர் குடும்பத்தோடு அன்றாடம் ஒரு கொரோனா விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா நுண்ணுயிரி தொற்று பரவலை தடுக்கும் வகைக்கு என்பதாக நடுவண் அரசு நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கடந்த இரண்டு கிழமைகளாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பேரறிமுக நடிகர் சூரி பொது மக்களை மிகழ்விக்கவும் அதே நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தன் குடும்பத்தோடு இணைந்து அன்றாடம் ஒரு காணொளியை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். 

இவ்வாறு நடிகர் சூரி வெளியிட்டு வரும் நகைச்சுவை கலந்த கொரோனா  தொற்று விழிப்புணர்வு காணொளிகள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும் தனக்கு தொலைப்பேசி வாயிலாக அழைத்து உதவி கேட்கும் நலிந்த கலைஞர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார். உலகமே கண்டு அஞ்சும் கொரோனா தொற்று மிக விரைவில் இவ்வுலகிலிருந்து மறைய, அனைவரும் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றி இந்த இக்கட்டான சூழ்நிலையை வென்று வரவேண்டும் என்று நடிகர் சூரி கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.