தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் அண்மையில் 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். அந்த விரைவுப் பேருந்துகளில் அவசர வழி உள்ளிட்ட குறிப்புகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன. 22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் அண்மையில் 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் புதிதாக இயக்கப்பட்ட இந்தப் பேருந்துகளில் அவசர வழி உள்ளிட்ட குறிப்புகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன. நடுவண் அரசில் கடந்த முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறார். செல்லாததாக அறிவிக்கப் பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய்தாள்களுக்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய்தாள்கள் வெளியிடப் படுகின்றன. புதியதாக வெளியிடப் பட்ட அந்த ரூபாய்தாள்களில், 500 மற்றும் 2000 என்கிற ரூபாய் மதிப்பு ஹிந்தியிலும் அச்சிடப் படுகிறது. இது, பாஜகவிற்கு இருக்கிற ஹிந்தித் திணிப்பு நோக்கத்தில் அந்தக் கட்சி தெளிவாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தமிழக அரசு புதியதாக கொணர்ந்த 500 பேருந்துகளில் அவசர வழி உள்ளிட்ட குறிப்புகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன. இது உறுதியாக எடப்பாடி அரசு திட்டமிட்டு செயலாற்றிய செயல் அல்லவே அல்ல. ஆனால் தமிழக மக்கள் புழக்கத்திற்காக வாங்கப் படுகிற பேருந்தில் அவசர வழி குறிப்புகள் கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும் என்பதை தமிழக அரசு சொல்லி வாங்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. ஆட்சி கிடைத்திருக்கிறது ஆள்கிறோம்! என்பதாக எந்த சமூக அக்கறையும் ஈடுபாடும் இல்லாத அவல ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு என்பது தெளிவாகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,206.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



