Show all

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள! தமிழகத்தில் விறுவிறுப்பான பரிசோதனைகள். இந்தியாவிலேயே மிக அதிகமாக

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, தமிழகத்தில் வீட்டுக்கு வீடு சென்று, இந்தியாவிலேயே மிக அதிகமாக, விறுவிறுப்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62305 பேர்களும், பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 6911 பேர்களும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது தோராயமாக 10ல் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. 

தமிழகத்தில் பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், பாதிப்பும் அதிகமாக தெரியத் தொடங்கியுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் பரிசோதனை மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பரிசோதனையைத் தீவிரப்படுத்தி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. 

தமிழகத்தில் இன்று மட்டும் 64129 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 2351463 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இதுவரை 2,13,723 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 10ல் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையிலும் 10ல் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பரிசோதனை அதிகரிப்பதை போல் குணம் அடைவோர் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5471 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலையில் 156526 பேர்கள் ஆவர். 

53,703 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 13744 பேர்களும், தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 3771 பேர்களும், செங்கல்பட்டில் 3141 பேர்களும், காஞ்சிபுரத்தில் 2640 பேர்களும், விருதுநகரில் 2612 பேர்களும், தூத்துக்குடியில் 2314 பேர்களும், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

கொரோனா உச்சத்தை தொட்டு வந்துள்ள நிலையிலும், சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை நிலையான அளவிலேயே உள்ளது. எனவே விரைவில் குறைய வாய்ப்பு உள்ளது. சிகிச்சை முறையும் சிறப்பாக உள்ளதால் குணம் அடைவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில்  குறைவாகவே உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.