குடும்ப அட்டைப் பொருட்கள் வழங்கும் கடைகளில் முகமூடி வழங்கும் திட்டத்தை, நாளை தொடங்கி வைக்கிறாராம் தமிழக முதல்வர். நல்லா வருவீங்க முதல்வரே. 11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: குடும்ப அட்டைப் பொருட்கள் வழங்கும் கடைகளில் முகமூடி வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறாராம் தமிழக முதல்வர். தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முகமூடிகள் என்கிற கணக்கில் மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 மறு பயன்பாட்டுத் துணி முகமூடிகள் வழங்கப்பட உள்ளனவாம். பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்டுள்ள முகமூடி தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த முகமூடியைத் துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் வழங்க முதல்கட்டமாக 4 கோடி முகமூடிகள் தயாராக உள்ளன. மீதமுள்ள 7 கோடி முகமூடிகளைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து குடும்பஅட்டை பொருள் வழங்கல் கடைகளிலும் இலவச முகமூடி வழங்கும் இந்தத் திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார். கொரோனாஇப்போது, தமிழக மக்களிடம் பனிரெண்டாம் வகுப்பு முடித்து- கொரோனா தடுப்பு மருந்துகளை எப்படி எதிர் கொள்ளலாம் என்பதான நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நம்ம தமிழக முதல்வர் கொரோனாவுக்கு இப்போதுதான் ஏ பார் ஆப்பிள், பி பார் பெல்; என்று பாடம் எடுத்துக் கொண்டிருப்பது போல இருக்கிறது இலவச முகமூடி. நல்லா வருவீங்க முதல்வரே!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



