Show all

ஓசைநாயகி அம்மன் கோயிலில் விஜயகாந்த் சிறப்பு வழிபாடு! தனக்கு மீண்டும் குரல் வளம் வேண்டி

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜயகாந்த் தனது பழைய குரல் வளம் வேண்டி சீர்காழியில் குடும்பத்தோடு வழிபாடு நடத்தினார். நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ளது பழமைவாய்ந்த ஓசைநாயகி அம்மன் ஆலயம். இங்கு குரல் பாதிப்பு உள்ளோர் மனமுருக வணங்கினால், அந்துப் பாதிப்பு நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கையுள்ளது.  தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினரோடு ஓசைநாயகி அம்மன் ஆலயத்தில், வழிபாடு நடத்தினார். கோவில் சார்பாக பரிவட்டம் கட்டி விஜய்காந்த்க்கு மரியாதை செய்யப்பட்டது குரல் வளம் வேண்டி அவர் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. திரைப்படங்களில் மிக நீளமான வசனங்களையும் உச்ச தொணியல் பேசி, இவரது வசனங்களுக்காகவே தனி ரசிகர்களை சம்பாதித்தவர் விஜயகாந்த். அரசியலிலும் இவரது பேச்சு ஆளும் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த பல மாதங்களாகவே, விஜயகாந்த் தொண்டை பிரச்சினையால் அவதிப்பட்டு, பழையமாதிரி பேச முடியாமல் சிரமப்படுகிறார். ஒருபக்கம் மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டாலும், மறுபக்கம், இறைநம்பிக்கை வழியில், தனது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியிலும் விஜயகாந்த் ஈடுபட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,749.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.