கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பிரியாணி மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் இரவு பகல் பாராமல் தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, இண்டூர் மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் கொரோனா நுண்ணுயிரித் தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு தொடக்க நலங்கு நிலைய பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள் என 250 பேருக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவாக பிரியாணி, முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான பொருட்கள் வழங்கப்பட்டன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



