Show all

துணைவேந்தர் லஞ்ச வழக்கை, நடுவண் குற்றப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: அன்புமணி

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பா.ம.க. அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

உயர் கல்வித்துறை கட்டுப் பாட்டில் மட்டும் 13 பல்கலைக் கழகங்கள் வருகின்றது. இத்தனைப் பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோரை லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமித்துள்ளனர்.

கோவை பாரதியார் பலல்கலைக்கழக துணை வேந்தர் லஞ்சம் வாங்கிய வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரித்து வருகிறார்கள். அவர்கள் விசாரித்தால் அந்த விசாரணை முறையாக இருக்காது. எனவே இந்த வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை வசம் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நமது வீட்டுப் பிள்ளைகள், அழகாக படம் வரைந்து, அல்லது சிறப்பாக நாட்டியமாடி, அல்லது ஒரு பேச்சுப் பேட்டியில் பரிசில் வாங்கி வரும் போது, நாம் மட்டும் மகிழ்வதில்லை. நமது சொந்தம் பந்தம், அக்கம் பக்கம், ஊர் உலகம் தெரிந்து கொள்ள, பறை சாட்டுவதோடு, தற்போதெல்லாம் முகநூல், கீச்சுப்; பக்கம், என்று இடுகையிட்டு விருப்பங்களை அள்ளிக் குவித்து மகிழ்கிறோம். இதிலே நம்முடைய பெருமை மிளிர்கிறது; திறமை மலர்கிறது; ஆதாயம் (கிரடிட்) வளர்கிறது. தன்னம்பிக்கை ஊக்குவிக்கப் படுகிறது. இதன் பொருட்டு நமது குடும்;;;ப நிருவாகத்திற்குள். குடும்பக் கட்டமைப்புக்குள் யாருடைய தலையீடும் வந்து விடுவதில்;லை.

அதேவேளை நமது வீட்டுப் பிள்ளை அப்பா சட்டைப் பையில் இருந்து ஒரு பத்து ரூபாய் எடுத்து விட்டது. அல்லது இது போன்ற ஏதாவதொரு தவறு நமது பிள்ளைகளால் நிகழ்த்தப் பட்டு விட்டது. அதை நமது குடும்பத்திற்குள்ளேயே சீர் செய்து கொள்கிறோம். இதற்கு, சொந்தம் பந்தம், அக்கம் பக்கம், ஊர் உலகத்தாருக்கு அழைப்பு விடுத்தோமானால் நமது குடும்ப நிருவாகம் அவர்கள் கைக்கு போய்விடும். நமது குடும்ப கட்டமைப்பு சிதைந்து அந்த வகையறாக்;களுக்கு அடிமைப் பட்டு விடும்.

நம்முடைய தமிழ்நாட்டில் வாழும் நூறு விழுக்காடு மக்களுமா இலஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்? நம்முடைய தமிழ்நாட்டில் வாழும் நூறு விழுக்காடு அதிகாரிகளுமா இலஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்? இலஞ்சம் வாங்குகிறவர்களும் திருடர்களைப் போல் தனியாக வாரிச் சுருட்டிக் கொள்கிறார்களா?

மக்கள் மீது தேவையற்ற விதிமுறைகள் அரசால் திணிக்கப் படும் போது, அந்த விதிமுறை சார்ந்த துறையில் அந்த விதிமுறையை நிருவாகப் படுத்துகிற அதிகாரிகளுக்கு அந்த விதிமுறையை மிறி ஆதாயம் பெற வாய்ப்புள்ளவர்கள் இலஞ்சம் கொடுக்கிறார்கள்; அதிகாரிகள் வாங்குகிறார்கள். நிருவாகத்தை முறைபடுத்துகிற எண்ணம் இல்லாமல், தண்டனை மூலம் இலஞ்சத்;தை ஒழிக்க முடியாது.

இலஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள்.

இலஞ்சம் கொடுத்தேன் விட்டு விட்டார்கள் என்கிற கதைதான்.

திருமணம் என்கிற ஒரு முறைப் படுத்துதலை தமிழன் உலகத்திற்கு கொடையாக வழங்காதிருந்திருந்தால், உலகத்தின் ஒழுக்க நிலையை எண்ணிப் பாருங்கள்.

தண்டனையே தீர்வாகாது என்கிற போது, தமிழகத்தில் நிருவாகச் சீர்மையின்மையால் நடந்து விட்ட ஒவ்வொரு குற்றத்திற்கும் நமக்குள் இருக்கிற சிறு சிறு பிணக்குகளை முன் வைத்து நடுவண் குற்றப் புலனாய்வுத் துறையிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிற அடிமைத் தனத்தை வைத்துக் கொண்டு நீட் தேர்வை எப்படி நிரந்தரமாக அப்புறப் படுத்துவது!

உயர் அறங்கூற்று மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக எப்படி நிறுவுவது!

இப்படி ஆயிரம் கேள்விகளில் இருந்தும் தமிழனை அடிமைத் தனத்தில் இருந்து விடுவிக்க முடியாது.

தமிழ் அடிப்படையை முன்னெடுக்கிறோம் என்கிற அமைப்பு சார்ந்தவர்களும் இப்படித் தடுமாறுவது உலக மகாவேடிக்கை.

எவனை விடவும் பெரிய தவறுகளில் எல்லாம் எந்தக் கேடு கெட்டத் தமிழனும் ஈடுபட மாட்டான். எவனும் யோக்கியன் என்றோ திறமையானவன் என்றோ தமிழனைத் தாண்டி சாதித்து விட முடியாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,688

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.