22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜக கட்சிக்கு தென்னிந்தியாவில் இருக்கும் முக்கியமான ஆத்மார்த்தமான அடிமை என்றால் அது தெலுங்கு தேசம் கட்சி மட்டும்தான். தென்னிந்தியாவில் பாஜக உருவாக்கி இருக்கும் பெரிய கூட்டணி அது மட்டுமே. இந்த நிலையில் அந்த கூட்டணியில் பெரிய பிளவு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. நடுவண் அரசின் வரவு-செலவு காரணமாக இந்த பிரச்சனை உருவாகியுள்ளது. தற்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்திரபாபு நாயுடுவிடம் சமாதானம் பேசும் நிலைக்கு சென்று இருக்கிறார். பாஜக எந்த வரவு-செலவில் கார்ப்பரேட் பினாமிகளுக்குத் தவிர எந்த மாநிலத்திற்கு என்ன வளர்ச்சி திட்டங்களை கொடுத்திருக்கிறது. தெலுங்கு தேசக் கட்சிக்கு என்ன திடீர் சிறுபிள்ளைத் தனமான கோபம்? ஆந்திராவில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாகவும் கூறுவது ஏன்? என்று பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு தேசம் நேற்று அவசர கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் பாஜகவுடன் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது. மாநில நலனுக்கு பாஜக உறவு ஒரு பயனும் தராது என்பது தெளிவாகப் புரிந்தாலும், பாஜகவின் வஞ்சக அரசியலில் இருந்து தற்காத்து கொள்ள முடியுமா? என்கிற கேள்வியால் இப்போதைக்கு எந்த விதமான முடிவும் அவசரப்பட்டு எடுக்கப்படமாட்டாது என்று தெலுங்கு தேசம் கூறியுள்ளது. அதே சமயம் பாஜகவிற்கு ஆதரவாகவும் பேசவில்லை. தற்போது அருண் ஜேட்லி இதுகுறித்து தொலைக்காட்சி பேட்டியில் பேசியுள்ளார். அதில் தெலுங்கு தேசம் கட்சி அவசரப்படக்கூடாது. ஆந்திராவுக்கு நாங்கள் தனியாக திட்டங்கள் வைத்து இருக்கிறோம். நாங்கள் சொன்ன அனைத்தும் செய்வோம். நடுவண் அரசின் எங்கள் வரவு-செலவை எங்கள் வாக்குறுதியுடன் குழப்பிக் கொள்ள கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார். ஆந்திர மாநிலத்தை அடிமைத் தனத்தில் இருந்து மீட்டு வளர்ச்சியை வென்றெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவாரா சந்திரபாபு நாயுடு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,688
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



