நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய்யுடன் தான் நடித்த முதல் படம் குறித்த அனுபவங்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 29,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பேரறிமுக ஹிந்தி திரையுலக நடிகையான பிரியங்கா சோப்ரா ‘முடிவல்ல’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதி உள்ளார் அதில் தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். அந்த நூலில் தனது முதல் தமிழ் படமான தமிழன் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தது குறித்தும், அவரிடம் கற்றுக்கொண்டது குறித்தும் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 2000-ம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற சில நாட்களிலேயே நான் திரையுலகில் நுழைந்தேன். முதலில் தமிழன் என்ற தமிழ் படத்தில் நடித்தேன். என் முதல் கதைத்;தலைவன் தளபதி விஜய். நடிகர் விஜய்யின் பணிவு மற்றும் கொண்டாடிகளுடன் அவர் நட்பாக பழகும் விதம், எனக்குள் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, எனது இணையத் தொடரான குவாண்டிகோவின் படப்பிடிப்பிற்காக நியூயார்க் நகரில் இருந்தேன். படப்பிடிப்பு நடத்தி வருவதை கொண்டாடிகள் அறிந்து, என்னுடன் புகைப்படம் எடுக்கத் திரண்டனர். நான் மதிய உணவு இடைவேளையின் போது கொண்டாடிகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அது எனது முதல்பட நடிகர் விஜய் எனக்கு கற்றுத்தந்த பாடம் என கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.