01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில். சென்னையில் உள்ள பல்லாவரத்தில் தொல்பொருள் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் 5.56 அடி நீளமுள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சவப்பெட்டியாக இருக்கலாம் என்று கருதத் தக்க 'பழங்கால கல்சிற்பத் தொட்டி' கிடைத்தது. இந்த பழங்கால கல்பொருளானது 12 கால்களை கொண்டுள்ளது. இது 5.6 அடி நீளமும் , 1.5 அடி அகலம். 1.6 அடி உயரும் கொண்டது. இது 2300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு கல் தொட்டியை 140 ஆண்டுகளுக்கு முன்பு அலெக்சாண்டர் ரியா என்ற பிரிட்டன் தொல்பொருள் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் பழங்கால கல்சிற்பத் தொட்டி சென்னையில் உள்ள கோட்டை அருங்காட்சியகத்தில், மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பழங்கால கல்சிற்பத் தொட்டி அங்கேயே தொடர்ந்து காட்சிக்கு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,882.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



