Show all

ஸ்டாலினுக்கு எதற்கு இந்த அசிங்கம் பிடித்த வேலை! கீழடி ஆய்வு முடிவின் பெருமிதத்தில் தமிழர் திளைத்திருக்கும் வேளையில்

கீழடி தமிழர் காலடி! திராவிடம் ஆரியம் செய்த பகடி; தமிழா பகைவரை சிதறடி! என்பன போல பலவாறாக சீற்றத்தை பதிவு செய்து வருகின்றனர் தமிழ்ப் பெருமக்கள், ஸ்டாலினின் அசிங்கம் பிடித்த கீச்சுவைச் சாடி.

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கீழடியில் நடைபெற்ற தொல்லியல் துறை ஆய்வு முடிவுகளை, தமிழக அரசு தமிழிலும், ஆங்கிலத்திலும் அறிக்கை வெளியிட்டு சங்க காலம் மேலும் நானூறு ஆண்டுகள் முந்தையது என்று தெரிவித்து, தமிழர் பெருமிதத்தில் ஆழ்ந்திட பாஜக அரசின் வஞ்சனைகளை முறியடித்து சாதித்தது. 

ஆய்வுகளின் முடிவில், கீழடியில் வாழ்ந்தவர்கள் கி.மு 6ம் நூற்றாண்டிலேயே கல்வியறிவு கொண்டவர்களாக விளங்கினார்கள் என்ற தகவல் வெளியானது. கங்கைக் கரையில் இரண்டாம் நகர நாகரீகம் நிலவிய அதே காலகட்டத்தில் கீழடியிலும் தமிழர்களின் நகர நாகரீகம் இருந்துள்ளது இதன் மூலம் உறுதியானது. தமிழி எழுத்துக்களும் கண்டெடுக்கப்பட்டன. தமிழினத்தின் பொற்காலம் என அறியப்படும், சங்க காலம் என்பது மேலும் 3 நூற்றாண்டுகள் பழமையானது என்பதை கீழடி அறுதியிட்டு கூறியது. சிந்து சமவெளி நாகரீகத்தின் தொடர்ச்சி, கீழடியில் தொடங்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள். அந்த அளவுக்கு தமிழினத்தின் தொன்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது கீழடி. 

இந்த நிலையில் கீழடி பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். இதன்பிறகு அவர் வெளியிட்ட ஒரு கீச்சுவில்தான் தன்னை தமிழர்களிடம், அசிங்கப் படுத்திக் கொள்ளும் வேலையைச் செய்துள்ளார். இதனால் ஒட்டு மொத்த இணையமும் இடுகைகளாலும், நையாண்டிப் படங்களாலும் கொந்தளித்து வருகிறது.
 
ஸ்டாலினின் அந்த அசிங்கம் பிடித்து கீச்சு: “திராவிட நாகரிகத்தின் தொட்டிலாக, சங்கத் தமிழர்களின் புகழ் கூறும் வைகை ஆற்றங்கரையில் உள்ள புனித பூமியான கீழடியைப் பார்வையிட்டேன். இந்திய வரலாறு தெற்கிலிருந்து - தமிழகத்தில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி உறுதி செய்திருக்கிறது.” இவ்வாறு ஸ்டாலின் கீச்சுப் பதிவிட்டிருந்தார். ஸ்டாலின் தமிழ்நாகரிகம் என கூறாமல், திராவிட நாகரிகம் என கூறியதுதான், தமிழர்களின் சீற்றத்திற்கு காரணம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,288.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.