ரூபாய் 30 கோடி செலவுத்திட்டத்தில் ஒரு படம் உருவாகவுள்ளது. கதைத்தலைவன்: விளம்பரங்களில் தமிழ்த் திரையுலகின் பிரபல கதைத் தலைவிகளுடன் ஆடி நடித்து இணையத்தில் அதிகம் பேசப்பட்டவர் 11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சரவணா அங்காடி உரிமையாளர் சரவணனைத் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது. வணிகத்தில் பிரபலம். அந்தக் கடையின் விளம்பரங்களில் அவர் தமிழ்த் திரையுலகின் பிரபல கதைத் தலைவிகளுடன் ஆடி நடித்து இணையத்தில் அதிகம் பேசப்பட்டவர். அந்த விளமபரப் படங்கள் எடுத்த ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோர் தற்போது சரவணனை கதைத் தலைவனாகக் கொண்டு ஒரு பாடம் இயக்கவுள்ளனர். இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது முடிவுக்குவந்துள்ளது என்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்தி வெளியாகியள்ளது. ரூபாய் 30 கோடி செலவுத்திட்டத்தில் படம் உருவாகவுள்ளது என்றும் கூறப்படுகிறது.. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,289.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.