Show all

இந்தியாவிற்கு ஐநா அவை கண்டனம்! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து

20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டனத்துக்கு உரியது என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து 100 நாட்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். போராட்டத்தின் 100-வது நாள் நடைபெற்ற பேரணியில் காவல்துறையினர் துப்பாக்கிச்சுடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அவை துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிரித்து தூத்துக்குடியில் போராட்டம் நடத்த பேரணியாக சென்றவர்கள் மீது காவல்துறையினர் ஆயுதங்களை பயன்படுத்தி  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் அவையின் கொள்கைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அனைத்து தொழில் நிறுவனங்களும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,807.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.