21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 45336 பேர் கலந்தாய்வுக்கு தகுதி அடைந்து உள்ளனர். இது 40 விழுக்காடு ஆகும். தமிழக மாணவர்களுக்கு என்றே சீனா எல்லை, பாகிஸ்தான் எல்லை என்றெல்லாம் தேர்வு மையம் ஒதுக்கியும், தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பே ஏகப் பட்ட மனஉளைச்சலை உண்டாக்கியும், தமிழக மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டம் வேறு நீட் தேர்வுக்கான வினாதாள் தயாரிப்புக்கான பாடத்திட்டம் வேறு என்ற நிலையிலும், தமிழ் மாணவர்கள் 40 விழுக்காடு வெற்றி பெற்றிருப்பது மிகப் பெரிய சாதனையாகும். ஆனால் இவர்கள் அனைவரும் நகர்ப்புறங்களைச் சார்ந்த தனிப்பயிற்சி பெற்ற மாணவர்களே. நீட் தேர்வு தனிப் பயிற்சி அளிக்கும் கார்ப்ரேட்டுகளுக்கானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 12 வது இடம் பிடித்து உள்ளார். தமிழில் தேர்வு எழுதிய 24,720 பேரில் 460 பேர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளது தமிழக கிராமப்புற மக்களுக்கு நீட் தேர்வின் மூலம் தீங்கு இழைக்கப் பட்டுள்ளது. வெளிநாடு வாழ் மாணவர்களில் 1200 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 7,314 மாணவர்கள் வேறு மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதி உள்ளது தெரியவந்துள்ளது -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,808.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



