19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு பக்கம்; தூத்துக்குடியில் 13உயிரை பலி கொண்ட காவல் துறை என்ற செய்தி வெளி வருகிறது. அதே சம காலத்திலேயே, திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் மோகன் என்பவர் தொடர் வண்டிமுன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தியும் வெளிவந்து, முன்னைய செய்திக்கு பொருத்தம் இல்லாத செய்தியாக நம்மை குழம்ப வைக்கிறது. இரண்டு செய்திகளும் நிச்சயமாக ஒன்றுக்கு ஒன்று வேறு பட்டதாக இருக்க முடியாது. இரண்டுக்கும் உறுதியாக ஒரு ஒற்றுமை இருக்கக்;; கூடும். அந்த ஒற்றுமையை ஆய்வு செய்தால் இரண்டு செய்திகளுக்குமான அடிப்படை கிடைத்து விடும். இரண்டுமே சமூகத்தில் இருந்து களையப் படவேண்டிய நிகழ்வுகள். அந்த அடிப்படையைக் கண்டறிந்து விட்டால் இரண்டு அவலங்களுக்குமே எளிதாக தீர்வு காணமுடியும். இந்த இரண்டு நிகழ்வுகளுமே காவல் துறையின் விருப்பத்தின் பாற்பட்டதன்று இரண்டு நிகழ்வுகளுமே மேலதிகாரிகளின் நெருக்குதலால் நிகழ்ந்தவை. மேலதிகாரிகள் நெருக்குவதற்கு அரசியல் காரணம். ஆக அரசியலை தூய்மை படுத்துவதில்தான் இரண்டுக்குமான தீர்வு இருக்க முடியும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,806.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



