Show all

இன்று காமராசர் பிறந்த நாள்! தமிழகத்தின் பெருமைக்குரிய முதல்வர்கள் பட்டியலில் முதல் இடம் பற்றும் மாமனிதர்

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தின் பெருமைக்குரிய முதல்வர்கள் பட்டியலில் முதல் இடம் பற்றும் மாமனிதர் காமராசர். இன்று அவர் பிறந்த நாளில், அவர் பெருமைகளைக் கொண்டாடுவோம். மாணவர்கள் கல்விக்கு, பசி தடையாகி விடக்கூடாது என்பதற்காக பள்ளியில் மதிய உணவு என்கிற மாபெரும் திட்டத்தைக் கொண்டு வந்தவர்.

இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் நடுவண் அரசுக்கு, தன் பிழைப்பிற்காக, தமிழர் மானத்தை அடகு வைத்து, மண்டியிட்டுக் கிடப்பதைப் போல் அல்லாமல், பொதுப் பணத்தில் ஒரு காசு வேண்டாம் என்று மானத்தோடு இருந்து அகில இந்திய அளவில் தமிழர் இனமானம் காத்தவர். அணைகள் கட்டி நீர் பெருக்கியவர். பள்ளிகள் கட்டி கல்வி பெருக்கியவர். தொழில் நுட்ப கல்லூரி பெற்று தமிழர் அறிவு பெருக்கியவர்.

வாழ்க அவர் புகழ் பல்லாண்டு!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,849.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.