31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தின் தேர்தல் தேவை: தமிழர் முன்னேற்றம், தமிழர் கல்வி, தமிழர் வேளாண்மை, தமிழர் நீராதாரம், தமிழர் வாழ்வுரிமை, தமிழர் வரலாறு, தமிழர் தொன்மங்கள், தமிழ் அதிகாரம், மொத்தத்தில் இந்திய மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான பாஜக அப்பறப் படுத்தப் பட்டாக வேண்டும்! அடுத்ததாக: தங்கள் தரங்கெட்ட பிழைப்பிற்காக, ஊழலை ஆட்சிகாலம் முடியும் வரை தற்காத்துக் கொள்வதற்காக, மேலே சொன்ன பாஜகவிற்கு தமிழகத்தை அடிமைப் படுத்தியிருக்கும், எடப்பாடி- பன்னீர் அதிமுக அப்பறப் படுத்தப் பட்டாக வேண்டும்! மேற்கண்டவர்களை வலுப் படுத்தும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அப்பறப் படுத்தப் பட்டாக வேண்டும்! அதுதாம்: தமிழர் முன்னேற்றம், தமிழர் கல்வி, தமிழர் வேளாண்மை, தமிழர் நீராதாரம், தமிழர் வாழ்வுரிமை, தமிழர் வரலாறு, தமிழர் தொன்மங்கள், தமிழ் அதிகாரம், மொத்தத்தில் இந்திய மாநிலங்களின் சுயாட்சிக்கு பாதுகாப்பாக அமைய முடியும். அந்த வேலைக்கு தயாராக எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்கிற எந்த கட்சிக்கும் ஆதரவாய் அமைய வேண்டியது ஒவ்வொரு தமிழர் கடமையாகும். இந்த நேரத்தில் தமிழர் கவனமாக இருக்க வேண்டிய ஒரு விசயமும் இருக்கிறது. பாஜக, எடப்பாடி- பன்னீர் அதிமுக விற்கு ஏதிரான, கட்சிகளில் உண்மையிலேயே வலுவான கட்சிகளின் கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்க வேண்டும். நமது மேலான வாக்குகள் உதிரியாக வீணாகிப் போகாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தினகரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது மக்கள் விரோத, ஊழல் நிறைந்த ஆட்சி. இந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வரும். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும். அப்போது செயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்து செயலலிதா அறிவித்த திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுவோம். இன்னும் 7 அல்லது 8 மாதங்களில் வரும் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். எங்கள் கூட்டணி தான் இந்தியத் தலைமை அமைச்சரைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். நடுவண் அரசில் யார் ஆட்சி அமைக்கலாம்? யார் தலைமை அமைச்சர் என்பதை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க போகிறார்கள். தமிழகத்திற்கு எது தேவையில்லையோ, மக்கள் ஏற்கவில்லையோ அதை சரி செய்து நல்ல அரசாங்கம் அமைக்க தமிழக மக்கள் வாக்களிப்பர்கள். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் வழக்கில் எங்களுக்கு 100 விழுக்காடு வெற்றி கிடைக்கும். பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை பற்றி என்ன விமர்சனம் செய்தாலும் எப்படி பதில் சொல்வார்கள். அவர்கள் தான் நடுவண் அரசுக்கு தமிழகத்தை அடகு வைக்கும், சேவகர்களாக இருக்கிறார்களே! தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாம்! இதை அமித்ஷா சொன்னால் தான் ஏற்போமா? சாதாரண மக்களுக்கும் இது தெரியும் என்று தெரிவித்துள்ளார், கருத்தில் எடுத்துக் கொண்டு கடைசியாக தீர்மானிக்கலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,849.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



