Show all

ஆங்கிலேயர் ஒருங்கிணைப்புக்கு பிந்தைய சென்னைக்கு 379வது பிறந்தநாள் இன்று

06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பன்னெடுங்காலமாக குமரிக் கண்டம், நாவலந்தேயம், தமிழகம் என்றறியப் படும் பகுதிகள், சேர சோழ பாண்டியர்களாலும், குறுநில மன்னர்களாலும் முழுக்க முழுக்க தமிழே ஆட்சி மொழியாகக் கொண்டு ஆளப்பட்டு வந்தன. 

இன்றைக்கு இருக்கிற சென்னை, ஆங்கிலேயர்களால் ஒரு சிறு பகுதியாக விலைக்கு வாங்கப் பட்டு படிப்படியாக ஒருங்கிணைக்கப் பட்டதாகும். இந்தச் சென்னை ஆங்கிலேயர்களால் சென்னப் பட்டினம் என்று பெயர் சூட்டப் பட்டிருந்தாலும், முகமதியர்கள் அதிகம் புழங்கி வந்ததால் மதராச என்றும் மெட்ராஸ் என்றும் பெயர் வழங்கி வந்தது. 

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு பின்பு மதராஸ் மாநிலம் தமிழ்நாடாகவும், மதராஸ் சென்னையாகவும் பெயர் மாற்றம் பெற்றன. 

சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முதன்மை நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாயிலாகக் கருதப்படுகிறது.

தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

தெற்கில் சிறந்து விளங்கும் சென்னை இந்தியாவின் இன்னொரு தலைநகரம் என்பதுதான் உண்மை. இந்தியாவின் பெரும் பகுதி பொருளாதாரம் சென்னையைத் தலைநகராகக் கொண்ட தமிழகத்தைச் சார்ந்ததுதான். இந்தியாவில் எடுக்கப் படுகிற எந்த முன்முயற்சிக்கும் சென்னையைத் தலைநகராகக் கொண்ட தமிழகமே அடிப்படை. 

இந்தியாவில் முதல் செம்மொழித் தகுதியை வென்றெடுத்தது தமிழ்தான். அப்புறம்தான் எல்லா மாநிலமும் அந்த வழியைப் பின்தொடர்ந்தார்கள். இந்தியாவில் வெற்றி வாகை சூடிய முதல் மாநிலக்கட்சி தமிழகத்தைச் சேர்ந்த திமுகதான்.

இந்திய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றில், அமைதிப் போராட்டமாக, மக்கள் போராட்டமாக, சல்லிக்கட்டை வென்றெடுக்கத் தளமானது உலகின் இரண்டாவது அழகான, நீளமான சென்;னைக் கடற்கரைதானே.

மொத்தத்தில் தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல சென்னை. தமிழர்களின் வாழ்வாதாரம்.

அத்தனை அடிப்படைகளுக்கும் காரணமான வெள்ளையர்களை நாம் இந்த நாளில் நாம் நன்றி கூர்வோம்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,887.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.