06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி பேட்டிகள் கொடுப்பதில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் யார், யார் எல்லாம் இறுதி வரை வருவார்கள் என்று இணைய ஆர்வலர்களின் கேள்விக்கு, தாடி பாலாஜி, மும்தாஜ், ரித்விகா ஆகியோர் இறுதி வரை வருவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். எதற்காக பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு செயல்படுவது ரித்விகா மட்டுமே என்று அழுத்தம் கொடுக்கிறார் வைஷ்ணவி. தனக்கும் ரித்விகாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டாலும் அவர் மீது நம்பிக்கை உள்ளது என்கிறார் வைஷ்ணவி. வைஷ்ணவி சொல்வதை பார்த்தால் வெற்றி வாகை சூடப் போவதற்கு வாய்ப்பு ரித்விகாவுக்கு அதிகம் இருப்பதாக கருதுவதும், அதையே இணைய ஆர்வலர்களும் விரும்புவதாகவும் தெரிகிறது. அதேவேளை பிக்பாஸ் என்ன கருதிக் கொண்டிருக்கிறாரோ என்ற ஐயப்பாடு, ஊடக மத்தியில் பிசிறு கிளப்பப் பட்டே வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,887.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



