12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் மக்கள் ஆர்வமாக பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தற்போது வாக்காளர்கள்: 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 பேர். பெண்கள் 2 கோடியே 98 ஆயிரத்து 60 ஆயிரத்து 765 பேர். இதர பிரிவினர் 5472 பேர். மேலும் வாக்காளர் பட்டியலில் வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 97 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, தமிழகத்தில் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 18 அகவை நிறைவடைந்தவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க வசதியாக தமிழகம் முழுவதும் நேற்றும், இன்றும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் பெயர் சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பம் செய்தனர். இந்த சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிறு) நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,073.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



