23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போரூரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 8 பேருடன் வேதாரண்யம் செல்வதற்காக 1,155 ரூபாய் கொடுத்து தமிழ்நாடு அரசு விரைவுப் பேருத்தில் முன்பதிவு செய்தார். ஆனால், அவர் அரசு விரைவுப் பேருந்தில் பயணம் மேற்கொள்ளச் சென்ற போது பேருந்தின் நடத்துநர் இல்லை எனக் கூறி இருக்கை வழங்க மறுத்துவிட்டார். இதனால் அஜீஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 8 பேரும் 350 கி.மீ . தொலைவிற்கு நின்றபடியே பயணித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் தீர்ப்பாயத்தில் 2 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு அப்துல் அஜீஸ் புகார் மனு பதிகை செய்தார். இம்மனுவை விசாரித்த தீர்ப்பாயத் தலைவர் எம் மோனி, முன்பதிவு செய்த பயணி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு பேருந்தில் இருக்கை வழங்காமல் நிற்க வைத்துப் பயணிக்க வைத்த காரணத்திற்காக, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், 36 ஆயிரத்து 203 ரூபாயை பயணச்சீட்டு கட்டணத்துடன் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,084.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.