இன்று ஞாயிறு மறைப்பு நாள். (கிரகணம்) இதை இயல்அறிவும் முன்கூட்டியே சொல்ல முடிகிறது. பஞ்சாங்கத்தாலும் முன்கூட்டியே சொல்ல முடிகிறது; ஆய்வுசெய்வோம். 07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று ஞாயிறு மறைப்பு நாள். (கிரகணம்) இதை இயல்அறிவும் முன்கூட்டியே சொல்ல முடிகிறது. பஞ்சாங்கத்தாலும் முன்கூட்டியே சொல்ல முடிகிறது; ஆய்வுசெய்வோம். கோள்களின் இருப்பு நிலை, ஞாயிற்றைப் புவி சுற்றி வருவதற்கான கால அளவு என்பனவற்றை, இன்றைக்கு இருக்கிற இத்தனை கருவிகளும் இல்லாத 5122 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து தொடர் ஆண்டு கணக்கை உருவாக்கியவர்கள் நம் பழந்தமிழர்கள். அது மட்டுமில்லாமல் நிலவு, ஞாயிறு மறைப்புகளை (கிரணங்களை) கணிப்பதற்கான இராகு கேது என்கிற கோள் மறைப்புகளையும் கண்டறிந்தபடி அதனைத் தொடர்ந்து வருகிற பஞ்சாங்கமும் இன்று ஞாயிற்று மறைப்பு (கிரகணம்) என்று தெரிவிக்கிறது. அது எப்படி தமிழர்களுக்கு சாத்தியமானது என்பது குறித்த தொடர் ஆய்வை மேற்கொள்ளும் முகமாக இன்றைய தமிழர்கள் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, வானியல் செய்திகளை ஆய்வு செய்திட முன்; வரவேண்டும். பொதுவாக இந்தப் பேரண்டத்தில் பல்வேறு வியப்புகள் அன்றாடம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையான வியப்புகளில் ஒன்றுதான் இந்த ஞாயிறு மறைப்பும். இந்த மறைப்பு இன்று காலை 9:15 முதல் பகல் 3:04 மணி வரை நிகழவுள்ளது. இது இந்தியா மட்டுமின்றி மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் தெரியும். இந்தியாவில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு ஞாயிறு மறைப்;பும் மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் சூரிய மறைப்பும் தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறை ஞாயிறு மறைப்பு நெருப்பு வளைய வடிவில் தோன்றும் என வானியலர்கள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்று மண்டலத்தில் ஞாயிற்றைச் சுற்றிவரும் கோள்களில் பூமியும் ஒன்று. அப்படிச் சுற்றி வரும் போது ஞாயிறு மற்றும் புவி இடையே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிலா ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த ஞாயிறு மறைப்பு ஏற்படுகிறது. நிலவு ஞாயிற்றை மறைக்கும் நிலையைப் பொறுத்து அதன் ஞாயிற்று மறைப்பு வகைகள் மாறுபடுகின்றன. மொத்தம் 3 வகையான ஞாயிற்று மறைப்புகள் உள்ளன. அவை முழு நேர ஞாயிற்;று மறைப்பு, பகுதி நேர ஞாயிற்;று மறைப்பு, மற்றும் நெருப்பு வளைய ஞாயிற்;று மறைப்பு என்பன ஆகும். இவற்றில் இன்று வானில் தோன்றவுள்ளது நெருப்பு வளைய ஞாயிற்;று மறைப்பு ஆகும். நெருப்பு வளைய ஞாயிற்;று மறைப்பு என்பது. நிலா புவியை நீள்வட்ட பாதையில் சுற்றி வரும். இதனால் சில நேரம் நிலா புவிக்கு அருகில் வருகிறது, சில நேரம் புவிக்கு வெகு தொலைவில் செல்கிறது. அப்படி நிலவு புவிக்குத் தொலைவில் இருக்கும்போது, புவியிலிருந்து பார்க்கும் நிலாவின் வெளிப்படையான அளவு சற்று குறைகிறது. இந்த நேரத்தில் ஞாயிற்;று மறைப்பு நிகழ்ந்தால், நிலாவினால் முழு ஞாயிற்றையும் மறைக்க முடியாது. அப்படி மறையாத ஞாயிற்றின் விளிம்பு பகுதிகள் நெருப்பு வளையம் போல் நிலாவைச் சுற்றி இருக்கும். இது தான் நெருப்பு வளைய ஞாயிற்;று மறைப்பு எனப்படுகிறது. இன்றைக்கு எத்தனையோ கருவிகளை வைத்துக் கொண்டு மனிதன் ஞாயிற்று மறைப்பையும், நிலா மறைப்பையும் கண்டுபிடித்துத் தெரிவிக்கிறான். நமது தமிழ் முன்னோர் எந்தக் கருவியும் இல்லாமல், பஞ்சாங்கத்தில் நிலா மறைப்பு, ஞாயிறு மறைப்பை முன்கூட்டியே கணித்துச் சொன்னதும்- புறநானூற்றில் வான்வெளி குறித்துப் பாடிய பாடலும், நம்மை வியப்பில் இருந்து மீளமுடியாமல் செய்கிறது. வானத்தில் ஞாயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது. அது மற்ற மற்ற கோள்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கோள்களுக்கெல்லாம் புறத்தே ஈர்ப்பற்ற, காற்றற்ற வெளி இருக்கிறது. இதையெல்லம் நமது கணியர்கள் நேரில் சென்று அளந்தவர்கள் போல கண்டு தெரிவிக்கிறார்கள் என்று ஒரு புலவன் தமிழ் கணியர்களை வியந்து மன்னனிடம் பாடுகிற பாடல்தான் இந்தப் புறநானூற்றுப் பாடல்.
ஞாயிறு மறைப்பு (கிரகணம்) இன்று வானில் தென்படவுள்ளது. இந்த மறைப்பு நெருப்பு வளைய மறைப்பாக அமையும் என்று சொல்லப்படுகிறது.
செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தோர் போல வென்றும்
இனைத்தென் போரு முளரே யனைத்தும்
அறிவறி வாகாச் செறிவினை யாகிக்
களிறுகவு ளடுத்த வெறிகற் போல
ஒளித்த துப்பினை யாதலின் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



