கொரோனா தொற்று, சென்னையைக் கூடுதலாகப் பாதித்து வரும் அதேவேளையில், குணமடைவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது. 07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தொற்று, சென்னையைக் கூடுதலாகப் பாதித்து வரும் அதேவேளையில், குணமடைவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருவது அறுதலான செய்தியாகும். தமிழ்நாட்டில்- கொரோனா தொற்றுக்கு, இதுவரை, 54 ஆயிரத்து, 449 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் மட்டும், 38 ஆயிரத்து, 327 பேர்களுக்கு, தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிய தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவது, அறுதலான செய்தியாகும். அதன்படி, தமிழ்நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 30 ஆயிரத்து, 271 பேர்கள் குணமடைந்து உள்ளனர். மீதம், 23 ஆயிரத்து, 509 பேர்கள் சிகிச்சையில் உள்ள நிலையில், 666 பேர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும், 21 ஆயிரத்து, 98 பேர்கள் தொற்றிலிருந்து மீண்டு உள்ளனர். மேலும், 16 ஆயிரத்து, 699 பேர்கள் மட்டும் சிகிச்சை பெறும் நிலையில், 529 பேர்கள் வரை பலியாகியுள்ளனர். சென்னை மாநகராட்சியில், தொற்றின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும், இராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்ட, 5,981 பேர்களில், 3,647 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இங்கு, உயிரிழப்பு, 97 ஆக உள்ளது. அ தண்டையார்பேட்டையில், 4,869 பேர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 2,489 பேர் குணமடைந்த நிலையில், 2,308 பேர்கள் சிகிச்சையில் உள்ளனர். இங்கு, 72 பேர்கள் உயிரிழந்துள்ளனர் அ தேனாம்பேட்டையில் தொற்றால் பாதிக்கப்பட்டோர், 4,652 பேர்கள். அவர்களில், 2,542 பேர்கள் குணமடைந்தனர். 2,040 பேர்கள் சிகிச்சையிலும் உள்ளனர். 70 பேர்கள் உயிரிழந்தனர். அதேபோல், கோடம்பாக்கத்தில், 4,149ல், 2,342 பேர்களும் அண்ணாநகரில், 3,972ல், 1,919 பேர்களும் திரு.வி.க.நகரில், 3,356ல், 1,965 பேர்களும், அடையாறில், 2,204ல், 1,239 பேர்களும், வளசரவாக்கத்தில், 1,638ல், 1,038 பேர்களும், குணமடைந்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



