Show all

கடைகள் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5மணி வரை திறந்திருக்கும்! சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில்

சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 வரை கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 வரை கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் நாளை முதல் வழக்கமான நேரமாக பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கட்;;டாயத்தேவைப் பொருட்களான காய்கறி, பழங்கள், மளிகைப்பொருட்கள் வாங்குவதற்கு தோதாக அவற்றை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய்தொற்றாகும். கட்டாயத்தேவைப் பொருட்களை வாங்க அவசரம் காட்டமால், பொறுமை காத்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து முகக் கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுதாகத் தமிழக அரசு கூறியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.