தமிழகத்தில் வடலூரில் வள்ளலார் அவர்கள் அணையாத அடுப்பு மூட்டி ஏழைகளுக்கு இடைவிடாது உணவு படைத்து வந்தவர். இன்றைக்கும் அது தொடர்கிறது. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடப்பதால், குடும்பத்தலைவிகள் அனைவரும் அணையாத அடுப்புக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்கள். 17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் அறுசுவைகளில் உணவு தயாரித்து குடும்பத் தலைவிகள் அசத்துகிறார்கள். அதேவேளையில் அணையாத அடுப்புகளால் எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ளதாம். கொரோனா பரவுவதை தடுக்கும் வகைக்கு மக்கள் விலைகொடுப்பில், நடுவண் அரசின் நிவாரணம் துளியும் இல்லாத அதிகாரப்பாட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலேயே தற்காலிக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக வீட்டு சமையல் சாப்பிடுபவர்கள் சிலரும், அவ்வப்போது வீட்டு சாப்பாட்டுக்கு இடைவெளி விட்டு உணவகங்களுக்கு சென்று தங்கள் விருப்ப உணவுகளை சாப்பிடுவதுண்டு. ஆனால் ஊரடங்கு காரணமாக வீட்டு சாப்பாடு மட்டுமே சாப்பிடவேண்டும் என்ற அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு, பெரும்பாலானவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதவிர வீட்டு கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கும் சுட்டி குழந்தைகளும் நொறுக்கு தீனி வகைகளை தேடுகின்றனர். அவர்களுக்கான நொறுக்கு தீனி வகைகளையும் தற்போது வாங்க முடியாத நிலை உள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான குடும்ப தலைவிகள், தாங்களே வீடுகளில் முறுக்கு, பஜ்ஜி, வடை, பனியாரம் உள்பட பல்வேறு வகையான நொறுக்கு தீனிகளை செய்து அசத்தி வருகிறார்கள். தமிழகத்தில் வடலூரில் வள்ளலார் அவர்கள் அணையாத அடுப்பு மூட்டி ஏழைகளுக்கு இடைவிடாது உணவு படைத்து வந்தவர். இன்றைக்கும் அது தொடர்கிறது. தற்போது குடும்பத்தலைவிகள் அனைவரும் அணையாத அடுப்புக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்கள். ஆனாலும் அல்லல்பாடு இல்லையாம்; சுகமான சுமை என்கின்றனர். ஆனால் நிவாரணம் இல்லாத ஊரடங்கால் கணவருக்கு என்னவோ காத்திருப்பது பெருஞ்சுமைதான் என்கின்றனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் மட்டும் வழக்கமான பயன்பாட்டை விட சமையல் எரிவாயு பயன்பாடு 25 முதல் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



