Show all

12 நாட்களில் பழையபடி மாறிய காணொளியை வெளியிட்டு அசத்தல்! நம்பி நாராயணன் படத்துக்காக முதிய தோற்றம் அடைந்த மாதவன்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்பி நாராயணன் படத்துக்காக முதியவரின் தோற்றத்தை அடைந்த மாதவன் 12 நாட்களில் பழையபடி மாறியது எப்படி என்ற காணொளியை வெளியிட்டுள்ளார்!

அலைப்பையுதே படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அப்பாவியாகத் தோற்றமளித்த மாதவன் இறுதிச்சுற்று படத்தில் தனது தோற்றத்தை மாற்றி வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து புதிய புதிய வேடங்களைத் தேர்வு செய்து நடிக்கும் அவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் வேதா படம் அனைவரது பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் அடுத்து இஸ்ரோ விஞ்ஞானி பற்றிய 'ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்' என்ற படத்தில் நடிக்கிறார். இதற்காக நம்பி நாராயணன் போலவே தனது தோற்றத்தை மாற்றி நடித்துள்ளார்.

இது பற்றி கீச்சுவில் பதிவிட்டுள்ள மாதவன் காணொளி இணைப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நம்பி நாராயணன் போன்ற தோற்றத்தைப் பெறுவதற்காக 2 நாட்கள் ஒரே நாற்காலியில் 14 மணி நேரம் அமர்ந்திருந்தேன் என்று கூறியுள்ளார்.

தலைமுடி, தாடி என நம்பி நாராயணன் போலவே மாறிய அவர் தொப்பையையும் வளர்த்திருக்கிறார். அதிசயமாக அடுத்த 12 நாட்களில் எந்த உணவுக் கட்டுப்பாட்டு முறையையும் பின்பற்றாமல் பழைய தோற்றத்துக்கு மாறியுள்ளார். 'நம்புங்கள். உங்களால் முடியும்' என்றும் தனது பதிவில் மாதவன் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,089.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.