Show all

எடப்பாடி அவர்களே! கட்சியைக் காப்பாற்றினால், ஆட்சி இல்லாவிட்டாலும் காலத்திற்கும் வருமானமே. திமுகபோல

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடப்பாடி- பன்னீர் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றஉறுப்பினர்கள் அனைவருமே தங்கள் பதவியை துறந்து, மோடிக்கு நெருக்கடி கொடுத்து காவிரியை மீட்டுக் கொடுத்தால், அதற்கான பலனை தமிழக மக்கள் உறுதியாகத் தருவார்கள். இந்த அடிப்படை அவர்களுக்கு கொஞ்சம் அவர்களுக்கு தெரியவே யில்லை. அதனாலேயே மீதி இருக்கும் காலத்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.  

எடப்பாடி- பன்னீர் அவர்களே! நீங்கள் உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக் கொள்கிறீர்கள். இப்போது நீங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் குறியாக இருந்தீர்கள் ஆனால் உங்களுக்கான தோல்வியை தமிழக மக்கள் மிகக் கேவலமாகத் தருவார்கள். அதாவது பெரும்பாலான தொகுதிகளில் உறுதியாக வைப்புத் தெகை இழப்பீர்கள். 

அப்படி கேவலமான தோல்வியை நீங்கள் சந்தித்தீர்கள் ஆனால் ஆட்சிக்கு வரும் கட்சி உங்களை அடியோடு அழிப்பதற்காக எல்லையில்லாத வழக்குகளைப் போடும். அப்புறம் வாழ்நாள் முழுக்க சிறையில் களிதான். உங்கள் சந்;;;ததிகள் நாதியற்றுப்; போகும். 

கட்சியைக் காப்பாற்;;றினால் ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக போல வஞ்சனையில்லாமல் காலத்திற்கும் வருமானம் பார்க்கலாம். 

அற்ப ஆயுள் உள்ள ஆட்சியைக் காப்பாற்றினால் சிறையும், களியும், சந்ததிகள் அடியோடு அழிந்து போவதும் உறுதி. எனவே பாஜகவிற்கு ஆதராவாய் இருந்து ஆட்சியைக் காப்பாற்ற முனையாதீர்கள். தமிழ்மக்களுக்கு ஆதரவாய் இருந்து கட்சியைக் காப்பாற்ற முனையுங்கள். புரியவில்லையென்றால் தினகரனிடம் பாடம் கேளுங்கள் உருப்படுவீர்கள். தமிழகமும் உருப்படும்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,742.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.