Show all

அஜய், கார்னிகா என்ற இந்த அழகான இருகுழந்தைகள் தற்போது இல்லை

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அஜய், கார்னிகா என்ற இந்த அழகான இருகுழந்தைகள் தற்போது இல்லை.

குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் அகவை 30. இவர் தனியார் வங்கியில் வீடுகள் வாங்க கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அபிராமி அகவை 25 இவர்களின் அழகிய அன்புச் செல்லங்கள்தாம் இப்போது நம்மோடு இல்லாத அந்த அஜய், கார்னிகா. 

முதல்தகவல்: விஜய் முந்தாநாள் இரவு வங்கியில் பணி காரணமாக வீட்டுக்கு வரவில்லையாம். இதையடுத்து அவர் நேற்று அதிகாலை வீட்டுக்கு சென்றாராம். அப்போது கதவை திறக்குமாறு மனைவிக்கு பேசியில் அழைத்துள்ளார். ஆனால் அவரது செல்பேசி அணைத்து வைக்கப் பட்டிருந்ததாம்

இதையடுத்து அவர் கதவை தட்ட முயன்ற போது கதவு திறந்திருந்தது தெரியவந்ததாம். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனராம். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இரண்டாது தகவல்: இந்நிலையில் வீட்டில் அபிராமியும் அவரது இரு சக்கர வாகனமும் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அபிராமியை தேடுவதற்காக தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே அபிராமிக்கு குன்றத்தூர்- போரூர் நெடுஞ்சாலையில் பிரியாணி கடையில் பணியாற்றும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது என்பது. சுந்தரத்தை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் நாகர்கோவிலுக்கு அபிராமி தப்பி சென்றது தெரியவந்தது.

மூன்றாவது தகவல்: குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர். இந்த நிலையில், அபிராமி நாகர்கோவிலில் காவல்துறையினரால்; இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

எல்லாவற்றையும் இணைத்து, எந்த புதிய நான்காவது செய்தி வெளியாகுமோ தெரியவில்லை. அந்த அழகிய இரண்டு பிஞ்சுகளை இழக்க, யாருக்கு எப்படி மனம் இடம் தந்தது என்பதை செரிமானம் செய்து கொள்ளவே மட்டும் முடியவே முடியாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,898.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.