17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு காரணங்களால் இணைய சேவையை முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலாவது இடம் பிடித்துள்ளது. உலகம் முழுக்க இணையம் வேகமாக வளர்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அரபு புரட்சிக்கும் கூட இணையம்தான் காரணம். இந்தியாவில் நடக்கும் பல போராட்டங்களை இணையம்தான் ஒருங்கிணைக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில்தான் அதிக அளவில், இணையம் முடக்கப்பட்டுள்ளது. இணையச் சேவையை முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலாவது இடம் பிடித்துள்ளது. இந்தியாதான் உலகில் அதிக முறை இணையத்தை தடை செய்துள்ளது. பல்வேறு காரணங்களை சொல்லி இணைய சேவையை தடை செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 154 முறை இணையம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு உப்புசப்பு இல்லாத பல காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. மக்களின் போராட்டம் அண்மைக் காலங்களில் அதிகமாகியுள்ளன. போராட்டம், பதற்றமான சூழல் அதிகமாக நிலவி வருகிறது. இந்தியாவிலேயே அதிகமாக காஷ்மீரில் 60 முறை இணைய சேவை முடக்கப்படுகிறது. காஷ்மீருக்கு அடுத்து ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத்தில் இணையம் முடக்கப்படுகிறது. போராட்டம், மதக்கலவரம் காரணமாக அங்கு இணையம் முடக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில்தான் இந்தியாவில் இணையம் முடுக்கப்படுவது அதிகம் ஆகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 16 ஆயிரம் மணி நேரம் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவோடு ஒப்பிடும் போது மற்ற நாடுகளில் மிக மிகக் குறைவான அளவிலேயே இணையம் முடக்கப்படுகிறது. போர் நடக்கும் சிரியாவில் கூட இந்தியா அளவிற்கு கேவலமாக இணையம் முடக்கப்படவில்லை. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இடம் பிடித்துள்ள பாகிஸ்தானில் கூட 19 முறை மட்டுமே இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. அங்கேயும் கூட அதுவம், காஷ்மீர் பிரச்சனை காரணமாகவே இணையம் முடக்க்கப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,898.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



