13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அடுத்த வெள்ளிக் கிழமைக்குள் நல்ல ஒரு முடிவு கிடைக்காவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழர் தேசிய கட்சி அறிவித்துள்ளது. கோவையில் தமிழக தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் மாநில தலைவர் சத்தியமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி விவகாரத்தில் நடுவண் அரசு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கியுள்ளதாகவும் உழவர்களின் நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அடுத்து வருகிற வெள்ளிக் கிழமைக்குள் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நல்ல ஒரு முடிவு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் இல்லையெனில் தமிழகம் முழுவதுமுள்ள நடுவண் அரசு அலுவலகங்களுக்குப் பூட்டு போடும் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,769.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



