Show all

பரபரப்பு கிளப்பினார் தமிழிசை! விமானத்தில், உடன் பயணித்த, கனடாவில் பயிலும், மருத்துவரின் மகள் சோபியாவுடன் வாக்குவாதம்

18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியைச் சேர்ந்த  மருத்துவரின் மகள் சோபியா என்பவர் கனடாவில் பயின்று வருகிறார். அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்த போது,

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அதே விமானத்தில் தமிழிசையும் பயணித்து இருக்கிறார். 

தான் வந்த விமானத்தில் உடன் பயணித்த தமிழிசையைப் பார்த்த சோபியா ஆச்சரியம் அடைந்திருக்கிறார். தமிழிசையைச் சந்தித்ததை நல்வாய்ப்பாக கருதி, அவரோடு பேச்சுக் கொடுத்திருக்கிறார். தனது ஐயங்களை பதிவு செய்த சோபியாவின் பேச்சை, நேரடியாக பாஜக ஆட்சியை சாடுவதாக எடுத்துக் கொண்டார் தமிழிசை. 

பொதுவாக தமிழகத்தில் தமிழிசைக்கு அப்படியான அனுபவங்களே கிடைக்கும் வகையாக, தமிழக மக்கள் பாஜகவின் மீது வெறுப்பும், ஓயாமல் சப்பைக் கட்டு கட்டும் தமிழிசையின் மீது கோபமும் கொண்டிருக்கிறார்கள் என்பதே எதார்த்தம்.

முகத்திற்கு நேரான திறனாய்வை தமிழிசையால் எதிர்கொள்ள முடியாமல் சத்தம் போட்டு பரபரப்பைக் கிளப்பி விட்டிருக்கிறார்.

சோபியா தமிழிசை வாக்குவாதத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான நிலைய காவல்துறையினர் தமிழிசையை சமாதானப்படுத்தியுள்ளார்கள். 

பின்னர் சோபியா அவர்கள் மீது தமிழிசை காவல்துறையில் புகார் அளித்து விட்டு அங்கிருந்து தென்காசி புறப்பட்டு சென்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,899.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.