Show all

தங்கள் முழுமையாக ஆண்டு முடித்த பிறகுதான் சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என்கிறது ஆளும் அதிமுக

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலை நடத்தி முடிக்க 4,000 கோடியும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் அதிகமான பணமும் செலவிடப் படுகிறது. அதை மிச்சப்படுத்த பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தேசிய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்புக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

நாளையும் நடைபெறும் இந்த கூட்டத்தில் இன்று அதிமுக சார்பில் மக்களவை துணை பேரவைத்தலைவர் தம்பிதுரை, தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்ரேயன், வேணுகோபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியதாவது: தங்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்தாண்டு அவகாசம் தேவையென்றும், அதனால் தமிழக சட்டமன்றத் தேர்தலை முழுமையாக நாங்கள் ஆண்டு முடித்தவுடன் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தாராம். 

அந்த பதின்மூன்று பச்சைப் படுகொலைகள் எந்த வாக்குறுதியின் கீழ் நிறைவேற்றப் பட்டது? அதுசரி தினகரன் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஆட்சி கலைந்து தானே தீரும். என்கிறார்கள் மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,841.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.