Show all

இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடரும் 2,50,00,000 ரசிகர்களுக்கு பிரியங்கா சோப்ரா நன்றி தெரிவித்துள்ளார்

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் நம்முடைய செல்பேசியைப் பயன்படுத்தி எடுக்கும் புகைப்படத்தை பல்வேறு வண்ணத்தில், வடிவத்தில் மாற்றித் தரும், முகநூல், கீச்சு போன்றதொரு செயலிதான் இன்ஸ்டாகிராம்.

நாம் எடுக்கும் படத்தை நம் விருப்பம் போல, நமக்கு எந்த வண்ணம், வடிவம் பிடிக்கிறதோ அந்த முறையில் நாம் படத்தை சேமித்துக் கொள்ளலாம். நாம் எடுத்து இருக்கும் சுமாரான படத்தைக்கூட இதன் மூலம் அழகாக்க முடியும்.

இதற்காக நமக்கு எந்த தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை என்பதே இதில் குறிப்பிடத்தக்க தகவல்.

கோடிக்கணக்கான மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் தான், முகநூல் இதை நூறு கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. 

இந்த இன்ஸ்டாகிராம் செயலியில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்திருப்பவர் பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ராவுக்குதான் அதிகம் பின்தொடர்வோர் இருக்கிறார்கள் என்பது தான் அந்த தகவல். இதற்காக தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார் பிரியங்கா சோப்ரா.

பிரியங்கா சோப்ரா - 2.5 கோடி

தீபிகா படுகோன் - 2.49 கோடி

விராட் கோலி - 2.27 கோடி

சல்மான் கான் - 1.73 கோடி

நரேந்திர மோடி - 1.35 கோடி

ஷாருக்கான் - 1.33 கோடி

அமிதாபச்சன் - 95 லட்சம் 

என பின்தொடர்வோர்கள் இருக்கிறார்களாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,841.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.