23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறந்த குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக தேநீர்க்கடை திரைப்பட விருது என்ற தலைப்பில் விருது வழங்கப்படுகிறது. கைத்தட்டல் சத்தத்தில் உன் கண் கலங்கினால் நீயும் கலைஞனே என்கிற உணர்வோடு சக கலைஞர்களை ஊக்குவிக்க தேநீர்க்கடை திரைப்பட விருது என்ற அமைப்பு சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு குறும்படங்கள் மட்டுமில்லாமல், சிறந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கவுள்ளது. முறைப்படி நடுவர்களை வைத்து தேர்ந்தெடுத்து படங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என முப்பது விருதுகளை வழங்குகிறது. இதில் சிறந்த திரைப்படங்களாக தீரன் அதிகாரம் ஒன்று, மாநகரம், அறம், அருவி, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை', 8 தோட்டாக்கள்', மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களுக்கும், குறும்படங்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வை சு.பு.எண்டர்டெயின்மென்ட், கிரிஷ் மீடியாவும் நிஷான் மீடியாவும் இணைந்து நடத்துகின்றன. திரையுலகின் சிறப்பு விருந்தினர் பலரும் பங்கேற்கவுள்ள இவ்விழா, வருகிற புதன் அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,841.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



