Show all

ரூ1000000000 செலவு புதிய ரூ100 தாளுக்கு ஏற்ப பணம் வழங்கு இயந்திரம் மாற்றியமைக்க! ஊதா கலரு ரிப்பன் யாரு உனக்கு அப்பன்

06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஊதா நிறத்தில் புதியதாக அறிமுகமாகும் 100 ரூபாய் தாள்களை வைப்பதற்கு ஏற்ற வகையில் பணம் வழங்கு இயந்திரங்களைச் மாற்றியமைக்க 100 கோடி வரை செலவு செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, புழக்கத்தில் இருந்த ரூபாய் தாள்களுக்குப் பதிலாகப் புதிய வடிவிலான ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிட்டு வருகிறது ரிசர்வ் வங்கி. இந்த வகையில், புதிய வடிமைப்பில் 2000, 500, 200, 50 மற்றும் 10 ரூபாய் புதிய தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதைப் போலவே அடுத்த மாதம், புதிய வடிவில் வெளிர்  ஊதா நிறத்தில் 100 ரூபாய் தாள்களை அறிமுகப்படுத்த உள்ளது ரிசர்வ் வங்கி. இவ்வாறு புதியதாக அறிமுகப்படுத்தப்படும் 100 ரூபாய் தாளை பணம் வழங்கு இயந்திரத்தில் பெறுவதற்கு ஏற்ற வகையில், பணம் வழங்கு இயந்திரங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். இதற்காக, இந்திய முழுவதும் சுமார் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பணம் வழங்கு இயந்திரங்களை மாற்றியமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய 100 ரூபாய் தாளை பணம் வழங்கு இயந்திரத்தில் பெறும் வகையில் பணம் வழங்கு இயந்திரத்தை மாற்றியமைக்க மட்டும் 100 கோடி செலவாகும் என்கிறார் பணம் வழங்கு இயந்திரங்களை வடிவமைக்கும் நிறுவனத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியன். பணம் வழங்கு இயந்திரங்களை மாற்றி அமைக்கும் பணி முழுவதும் நிறைவடைய 12 மாதங்களுக்கு மேலாகும் என்கிறார் ஹிடாச்சி பணச்சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லோனி ஆன்டனி. 

இவர், இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 200 ரூபாய் தாள்களுக்கு ஏற்றவகையில் இன்னும் பல பணம் வழங்கு இயந்திரங்களை மாற்றும் பணியே இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான பின்பு, பொதுத்துறை வங்கிகளின் பணம் வழங்கு இயந்திரம் பல செயல் இழந்தன. அவ்வாறு செயல் இழந்த பல பணம் வழங்கு இயந்திரங்கள் இன்னும் சரி செய்யப்படாமலேயே உள்ளன. மேலும், பணம் வழங்கு இயந்திரங்களை மாற்றியமைக்க, செய்யப்படும் செலவு 100 கோடி ரூபாயையும் வாடிக்கையாளர்களாகிய பொதுமக்களிடமே வங்கிகள் வசூலிக்கவும் யோசித்து வருகின்றன.

கருப்புப் பணம், கள்ளப் பணம், தீவிரவாதிகள் தொல்லை தாங்கமுடியவில்லை உடனடியாக பணமதிப்பு நீக்கம் செய்யுங்கள் மோடி! என்று இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் மோடி வீட்டு வாசலில் அமர்ந்து, மோடி பதவியேற்ற நான்கு ஆண்டுகளாக கதறி கதறி அழுது கொண்டிருந்தார்கள் இல்லையா? அதனால் இந்த செலவை இந்தியப் பொது மக்கள்தாம் ஏற்றாக வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,856. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.